முக்கிய செய்திகள்

கருணாநிதி அழைத்தால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் : மு.க. அழகிரி..


சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக தலைவர் உடல்நலம் தேறிவருவதாகவும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவேன் என்றார்.