
கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
70 ஆண்டுகள் பழமையான சிலையை அகற்றிவிட்டு, முதல்வர் புதிதாக திறப்பதற்காக அவசரகதியில் இரவோடு இரவாக தரமற்ற நிலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது என ஜோதிமணி குற்றம்சாட்டியிருந்தார்.