காஷ்மீர் எல்லையில் விமானத் தாக்குதல் : வெளியுறவுத் துறை செயலர் விளக்கம்..

காஷ்மீர் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் பற்றி இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதுடன் தீவிரவாதிகள் பல்வேறு நாச வேலைகள் செய்ய உதவி வருவதை இந்தியா ஆதாரத்துடன் பாகிஸ்தானிடம் தெரிவித்தும் அந்நாடு கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் காஷ்மீர் எல்லைக்கு அப்பால் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை அதிரடியாக தாக்குதல் நடத்தி பல முகாம்களை அழித்தது.

தாக்குதல் நடத்திய பகுதி வனப்பகுதியென்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை எனத் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே கூறியுள்ளார்.

பாலாகோட் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு..

தீவிரவாத முகாம்களை தாக்கியழித்த இந்திய விமானப்படைக்கு முதல்வர் வாழ்த்து

Recent Posts