காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு…

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎஃப் பேருந்து மீது காரை மோதி குண்டு வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதலில்

சிஆர்பிஎஃப் ஜவான்களின் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் பெயர் ஆதில் அகமது தார்,

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவராவார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

ஆதில் அகமது என்ற இவர் ஆதில் அகமது காடி தக்ரனேவாலா என்றும் அறியப்படுகிறார். ஜெய்ஷ் அமைப்பில் இவர் கடந்த ஆண்டு சேர்ந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இவர் காகபோராவைச் சேர்ந்தவர்.

சுமார் 40 வீரர்களுடன் இருந்த சிஆர்பிஎப் பேருந்தின் மீது 350 கிலோ வெடிபொருட்கள் நிரம்பிய ஸ்கார்பியோ காரை மோதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலான இது நடந்த முடிந்த பிறகே பயங்கரவாதி ஆதில் அகமதுவின் புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகின.

வீடியோவில், “என் பெயர் ஆதில் ஓராண்டுக்கு முன்பாக ஜெய்ஷில் சேர்ந்தேன். ஓராண்டு காத்திருப்புக்குப் பின் ஜெய்ஷில் ஏன் சேர்ந்தேனோ அந்தக் காரணத்தை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்தது.

இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன் நான் மேல் லோகம் சென்றிருப்பேன். காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி இது” என்று ஆதில் ரஷீத் கூறியிருக்கிறார்.

வீடியோவில் ஆயுதங்களுடன் இருக்கும் ஆதில், ஜெய்ஷ் அமைப்பின் பேனர்களுடன் இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளில் ஜெய்ஷ் அமைப்புத் தீவிராதத் தலைவர்கள் ஏறக்குறைய கொல்லப்பட்ட பிறகு இந்த பயங்கரமான தாக்குதல் ஜம்மு காஷ்மீரையும் நாட்டு மக்களையும் உலுக்கியுள்ளது.

2017-ல் பாரமுல்லாவில் பாதுகாப்புப் படையினரால் ஜெய்ஷ் அமைப்பின் ஆபரேஷன்ஸ் தலைவர் கலீத் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லல் திருத்தேர் செய்த மதுரகவி ஆண்டவர் வரலாறு : வெற்றியூர் தமயந்தி் சண்முகம் பாடியது

மக்களவைத் தேர்தல்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு..

Recent Posts