முக்கிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ஃபரூக் அப்துல்லா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து..


ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா,மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார். ‘பாகிஸ்தான் ஒன்றும் பலவீனமான நாடு அல்ல. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியா கைபற்றுவதற்கு, அவர்கள் கையில் வளையல் போட்டு இருப்பவர்கள் அல்ல’ எனப் பேசினார். கடந்த வாரம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி பாகிஸ்தானுக்குதான் சொந்தம் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.