காஷ்மீரை இந்தியாவிடமிருந்து விடுவித்து பழிதீர்ப்போம்: தீவிரவாதி ஹபீஸ் சையது..


மும்பை தாக்குதலில் முக்கிய தீவிரவாதியாக கருதப்படும் ஹபீஸ் சையது, காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரித்து இந்தியாவை பழி தீர்ப்போம் என்று கூறியுள்ளார்.

கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தப் போரின் முடிவாக, கிழக்குப் பாகிஸ்தான் பாகிஸ்தானிடமிருந்து பிரிக்கப்பட்டு வங்காள தேசம் என்ற தனி நாடாக உருவாக்கப்பட்டது. இதைக் கொண்டாடும் விதமாக, வங்காளதேசம் மற்றும் இந்தியாவில் டிசம்பர் 16 ஆம் தேதி வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் போருக்கு பழிவாங்கும் விதமாக காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரித்து, சுதந்திரம் தருவோம் என மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தீவிரவாதி ஹபீஸ் சையது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, மும்பை தீவிரவாத தாக்குதலில் போதிய ஆதாரம் இல்லாததால் அவரை விடுவித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.