முக்கிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை..


ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாராவில் உள்ள குலூரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.