அட…. கள் குடித்த குரங்கே…!

Katju & Monkey

________________________________________________________________________

 

katjuநீதிபதிகள் கூறும் கருத்தையோ, அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவையோ விமர்சிக்கக் கூடாது என்கிறது நமது ஜனநாயக மரபு. ஆனால், அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சிலர் போடும் ஆட்டத்தைப் பார்த்தால், நீதிபதி என்ற பதவியின் மீது நாம் வைத்திருக்கும் மரியாதையும், நம்பிக்கையும் எத்தனை அர்த்தமற்றவை என எண்ணத் தோன்றுகிறது. குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ போன்றவர்களின் நடவடிக்கையும், கருத்துகளும்தான் இத்தகைய அவநம்பிக்கையைத் தோற்றுவிக்கக் காரணமாக இருந்து விடுகின்றன.

 

அண்மைக் காலமாக அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் அருவருப்பின் எல்லையைத் தொடுவதாக மட்டுமின்றி, இவ்வளவு மலிவான நான்காம் தர மனிதர்கள் எல்லாம் எப்படி மிக உயர்ந்த பதவியில் அமர்ந்து விடுகிறார்கள் என்ற வேதனையும் ஏற்படுகிறது.

 

ஜெயலலிதாவைப் பற்றி அண்மையில் அவர் வெளியிட்டுள்ள கருத்து மக்களின் பொதுப்புத்தியில் நீதிபதிகள் குறித்து படிந்திருக்குமே மரியாதை கலந்த ஒரு நம்பிக்கை, அதை அப்படியே வழித்தெறிந்து விடும் அளவுக்கு வக்கிரமாக இருக்கிறது.

 

அவரது ட்விட்டர் தளத்தில் அவர் கூறியிருக்கிறார்…

 

ஜெயலலிதா ஒரு பெண் சிங்கமாம். அவரை இவர் ஒரு காலத்தில் ஒருதலையாய் காதலித்தாராம். அப்போது ஜெயலலிதா மிகவும் கவர்ந்திழுக்கக் கூடிய அழகுடன் இருந்தாராம். அதனால் இவர் ஒருதலையாய் அவரைக் காதலித்தாராம். அது ஜெயலலிதாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று வேறு வருத்தப்படுகிறார். இன்றும் அவர் ஈர்க்கக் கூடிய சக்தியுடன் உள்ளாராம். பெண் சிங்கமான ஜெயலலிதாவை எதிர்ப்பவர்கள் லங்கூர் வகைக் குரங்குகள் போல இருக்கிறார்களாம்.

 

இவையெல்லாம் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவரின் அறிவில் இருந்து உதிரும் அற்புதக் கருத்துகள்.

 

முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனையெல்லாம் நடத்தியதாக செய்தி வெளியிடும் போது அதற்கான புகைப்படத்தையும் வெளியிடலாமே என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியதற்கு இவரெல்லாம் என்ன மனிதர் என எள்ளி நகையாடினார் இந்த கனம் முன்னாள் நீதிபதி கட்ஜூ.

 

இப்போது பொதுவெளியில் பேசக் கூட முடியாத ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறாரே இவரை என்னவென்பது… அரசியல் ரீதியாக கேள்வி எழுப்பும் பலரையும் லங்கூர் குரங்குகள் என்கிறாரே… இவரெல்லாம் நீபதியாக இருந்திருக்கிறார் என்றால் அந்தப் பதவியின் தன்மையும், தரமும்தான் என்ன….

 

கனம் நீதிபதியாக இருந்த ஒருவர் இப்படி கள் குடித்த குரங்காக ஆகி விட்டாரே எனப் புலம்புகின்றனர், நீதித்துறையைச் சேர்ந்த பெரியவர்கள்.

 

“அட குரங்கு….” என்று கூறி காறி உமிழ்வதைத் தவிர வேறு என்ன செய்ய…!

 

– நடப்பு குழு

 

_____________________________________________________________________