‘கேடித் திருடனை கைது செய்த கில்லாடி போலீஸ்’ என பாராட்டுகளைப் பெறும் காரைக்குடி சரக காவல் துறையினர் டிஎஸ்பி டாக்டர் .அருண் தலைமையில் காவல்துறையினர் கில்லாடியாக செயலாற்றி துரிதமாக செயலாற்றி வருகின்றனர்.
அதற்கு ஒரு உதாரணமாக நேற்று மாலை மானகிரி யில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த தனியார் பள்ளி ஆசிரியை நல்லம்மை (35)என்பவர் கழுத்தில் இருந்து பறித்துச் செல்லப்பட்ட ஆறு பவுன் தாலிச் சங்கிலி குறிதுவழக்கு பதிவு செய்த காவல்துறை18 மணி நேரத்திற்குள் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.
குற்றவாளி பெயர் கலை தாஸ் 25/21 த/ பெ நாச்சியப்பன் புதுவளவு, கொரட்டி. அதே கொள்ளையன் கடந்த மார்ச் மாதம் திட்டு மலை காளி கோவில் அருகே தனியார் பேக்கரியில் வேலை செய்து விட்டு வீடு நோக்கி சென்ற தாய் மற்றும் மகள் பெயர் சுபா பயணம் செய்த இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து ஐந்தரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்த குற்றவாளியும் இவன் என்பது அடையாளம் காண்டுள்ளனர்.
அப்பொழுது அவன் உபயோகப்படுத்தியது ஸ்ப்ளெண்டர் பைக் ஆகும் தற்பொழுது விலை உயர்ந்த கேடிஎம் இருசக்கர வாகனத்தில் வந்து நகை பறித்து சென்றது தெரியவந்துள்ளது DSP அவர்கள் உத்தரவின்பேரில் குன்றக்குடி காவல்துறையினரின் அதிவேக செயல்பாடு பாராட்டப்பட வேண்டியதே உடனடியாக குற்றவாளியின் வாகனத்தை அறிந்து அதை வாகனத்தின் விற்பனையாளரிடம் காவல் துறையினர் விசாரித்து அவர்களிடம் இந்த வாகனம் எங்கு விற்கப்பட்டது யாருக்கு விற்கப்பட்டது என்ற விவரங்களை கேட்டு அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை அவனது வீட்டிற்கு சென்று கைது செய்துள்ளனர்
இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் குன்றக்குடி காவல்துறையினரை மிகவும் பாராட்டி வருகின்றனர். நாமும் காவல்துறைக்கு “ராயல் சல்யுட் ”அடித்து பாராட்டுவோம்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்