கீழடி அகழாய்வு விவகாரம் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…

கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்,

இந்த விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை அசாம் மாநிலத்துக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அகழாய்வு பணி முடிந்து,

அறிக்கை தயாரிக்க வேண்டியுள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும் எனக் கூறிய நீதிபதி,

இந்த விஷயத்தில் மத்திய அரசு இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், அசாமுக்கு மாற்றப்பட்ட அமர்நாத்தை, 15 நாட்களில் தமிழகத்துக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம் நிறைவு கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பட்டியல் வெளியாக வாய்ப்பு..

மக்களவையில் செயல்படாத தமிழக எம்.பிக்கள் பட்டியலில் அன்புமணி ராமதாஸ் …

Recent Posts