ஓணம் விழாக்கள் ரத்து: கேரள அரசு அறிவிப்பு

கேரள மாநிலத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் தத்தளிப்பதால் ஓணம் விழாக்களை அரசு ரத்து செய்துள்ளது.

கேரளாவில்  கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் புதன்கிழமை அன்று தொடங்குகிறது. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த பண்டியை அரசின் சார்பாக பல இடங்களில் நடத்தப்படும். மழை வெள்ளத்தால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அரசின் சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டியை ரத்து செய்யப்பட்டு அந்த பணம் நிவாரண நிதிக்கு பயன்படுத்தப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன்  அறிவித்துள்ளார்.

Kerala Govt Canceled all Onam functions