பேரழிவில் இருந்து மீள முயலும் கேரளம்: சாலைகளை தாங்களே சீரமைக்கத் தொடங்கிய மக்கள்

கேரளாவில் மழை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், பல இடங்களில் சீர்குலைந்த சாலைகளை பொதுமக்களே தங்களது சொந்த முயற்சி மற்றும் பணச் செலவில் சீரமைத்து வருகின்றனர். பாலக்காடு அருகே ஆலத்தூர் கிராமத்தில் முற்றிலும் சேதமடைந்த சாலையை,  கற்கள், மண்ணைக் கொண்டு அப்பகுதி மக்களே சீரமைத்து வருகின்றனர். “இந்தச் சாலையை அரசு சீரமைப்பதற்கான கோப்புப் பணிகள் முடியவே ஆறேழு மாதங்கள் ஆகும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். அதுதான் எங்களால் முடிந்த அளவு முதலில் சாலையை செப்பனிட முயன்று வருகிறோம்” என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

கேரளாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளிலும் இதுதான் நிலை. அரசு உதவிக்காக காத்திராமல் அவர்களே களத்தில் இறங்கி சீரழிந்த தங்களது சொந்த மண்ணை சீரமைத்து வருகின்றனர்.

Kerala people reconstructed them self their damage roads