கேரளத்தில் வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட இயற்கையின் அதி தீவிர பேரிடர் குறித்து விவாதித்து முடிவுகள் எடுப்பதற்காக இன்று காலை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது.
இந்தக்கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மழை காரணமாக இறந்த 453 பேருக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.