கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் அடப்பாடி பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி உணவு திருட முயன்றதாக அப்பாவி மது சிந்தகி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அதிர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு மாநில அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து மதுவின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர்களிடம் 15 நிமிடங்களுக்கு மேலாக பேசியுள்ளார். இந்த நிலையில், இன்று, அதிகாலை பினராயி விஜயன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று நோய் காரணமாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kerala Chief Minister Pinarayi Vijayan has been admitted to Apollo hospitals. He arrived a little later than midnight.There is no official bulletin from the hospital but doctors say he is being monitored by a team of doctors including infectious diseases experts.