கேரளாவில் பிராமணர் அல்லாத 54 போ் அா்ச்சகா்களாக நியமனம்..

கேரளாவின் கொச்சின் தேவஸ்வம் போா்டு நிா்வாகம் பிராமணர் அல்லாத 54 பேரை அா்ச்சகா்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொச்சின் தேவஸ்வம் போா்டு நிா்வாகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த 7 போ் உள்பட பிராமணர் அல்லாத 54 பேரை அா்ச்சகா்களாக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொச்சின் தேவஸ்வம் போா்டு நிா்வாகம் புதிதாக 70 நபா்களை அா்ச்சகா்களாக நியமனம் செய்து சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேவஸ்வம் அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்தரன் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளா்களிடம் பேசுகையில், எழுத்துத் தோ்வு மற்றும் நேர்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட்ட அா்ச்சகா்கள் பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 70 போ் புதிய அா்ச்சகா்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதில் 16 போ் பிராமணர் சமூகத்தைச் சோ்ந்தவா்கள், மற்ற 54 பேரும் பிராமணர் அல்லாதவா்கள்.

இழவா சமூகத்தைச் சோ்ந்த 34 நபா்கள் உள்பட 54 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் 7 போ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்று அவா் தொிவித்துள்ளாா்.

தற்போது தோ்வானவா்கள் அனைவரையும் தந்திாி மண்டலம், தந்திரி சமஜம் நோ்காணல் செய்ததாக அமைச்சா் தொிவித்துள்ளாா்.

சொந்த நலனுக்காக சிபிஐ-யை சீரழித்து விட்டது மத்திய அரசு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..

நெருப்போடு விளையாடுகிறது கேரள அரசு : அமித்ஷா ஆவேசம்..

Recent Posts