
கேலோ இந்தியா போட்டிகளில் தமிழ்நாடு 2-ம் இடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
38 தங்கம், 20 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என 97 பதக்கங்களை தமிழ்நாடு வென்றுள்ளது. கடந்த முறை 8-ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, ஹரியானாவை பின்னுக்குத் தள்ளி முதல்முறையாக 2-ம் இடம் பிடித்துள்ளது
கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு நிறைவடைந்துள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 98 பதக்கங்களை வென்ற தமிழகம் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. முதல் முறையாக கேலோ இந்தியாவில் இந்த சாதனையை தமிழகம் படைத்துள்ளது.
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்றது. கடந்த மாதம் (ஜனவரி) 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் நடைபெற்றது. பல்வேறு வகையிலான விளையாட்டு பிரிவுகளில் இந்திய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மொத்தம் 13 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் தமிழகம், 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என மொத்தமாக 98 பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் பிடித்தது. முதல் இடத்தை மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தை ஹரியாணாவும் பிடித்துள்ளன.
“தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. பதக்க பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் ஹரியாணாவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடன் இணைந்து கோப்பை வழங்கினோம்.
முதல் முறையாக தமிழகம் கேலோ இந்தியா விளையாட்டில் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து வரலாறு படைத்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக நமது திராவிட மாடல் அரசு விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்காக எடுத்த நடவடிக்கைகள் தான் இதற்கு ஒரே காரணம். வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.