கோமியத்தை(பசு மூத்திரம்) மருத்துவப் பொருளாக அறிவிக்க நடவடிக்கை : மத்திய அமைச்சர்…

கோமியம் (பசு மாட்டு மூத்திரம்) விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்பட இருப்பதாக மத்திய சுகாதாரதுறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் செளபே தெரிவித்துள்ளார்.

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதி நவீனபுற்று நோய் சிகிச்சைக் கருவிகளை தொடங்கி வைத்துப் பேசிய அவர்,

கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு சர்வதேச அளவிலான சிகிச்சைகள் இந்தியாவில் கிடைப்பதாகத் தெரிவித்தார்.

2025க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய சுகாதார துறை முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட இருப்பதாகவும்,

அதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் மருத்துவக் கல்வி இடங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சேலம், மதுரை, தஞ்சை மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உட்கட்டமைப்பு மேம்படுத்தபட்ட பின்னர் அவற்றில் மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கோமியத்தை மருத்துவப் பொருளாக அறிவிக்கும் வகையில் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

யோகா, சித்தா, யுனானி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இலக்கை அடைய முடியாவிட்டாலும் விண்வெளி ஆய்வில் இது புதிய மைல்கல் தான் : தினகரன் பாராட்டு..

சி.பி.எஸ்.இ : 6-ம் வகுப்புத் தேர்வில் சாதி பாகுபாடு, வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் : மு.க.ஸ்டாலின் கண்டனம்

Recent Posts