மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை கோரிய கிரண்பேடியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத்தடை கோரிய கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிரண்பேடியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளனர்.
இடைக்கால தடை விதிக்காவிட்டால் கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
அதிகார ஆளுமை தொடர்பாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. கிரண்பேடி, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் ஆனதில் இருந்து, நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்பதில், முதலமைச்சர் நாராயணசாமியுடன் மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரியில் முதல்வருக்கே அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிர்வாக விவகாரத்தில் கிரண்பேடி தலையிடக் கூடாது என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கிரண்பேடி மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை அமல்படுத்த தடை:
வரும் 7ம் தேதி நடக்கும் புதுச்சேரி அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஜூன் 7-ம் தேதி புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை 10 நாட்களுக்கு அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநில அமைச்சரவை கூட்டம் கூட உள்ளதால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
மததிய அரசு கோரிக்கையை ஏற்று தடை விதித்த உயர்நீதிமன்றம் வழக்கை ஜூன் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.