
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக இ.பி.எஸ்.க்கு விலக்கு அளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.