கொல்கத்தா அருகே பிளாஸ்டிக் பைகளில் உயிரிழந்த நிலையில் 14 பச்சிளம் குழந்தைகள்


கொல்கத்தாவில் உள்ள ஹரிதேபூர் அருகே 14 பச்சிளம் குழந்தைகள் பிளாஸ்டிக் பைகளில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளின் உடல்கள் மீது கெமிக்கலில் தெளிக்கப்பட்டு துர்நாற்றம் வீசாதவாறு சுற்றப்பட்டுள்ளது.
இது சட்டவிரோத கருக்கலைப்பு கும்பலால் நிகழ்த்தப்பட்டாதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அம்மாநிலத்தில் உள்ள ஹரிதேவ்பூரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.

குப்பைக்காடாக இருந்த அந்த இடத்தை சுத்தம் செய்ய வேலையாட்களை நியமித்திருந்து. இன்று பிற்பகல் முதல் அவர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் 14 குழந்தைகளின் எலும்புக் கூடுகளைக் கண்டறிந்த வேலையாட்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எலும்புக் கூடுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுவா வளர்ச்சி?: ட்விட்டரில் புள்ளி விவரங்களுடன் கேள்வி எழுப்பி இருக்கும் ப.சிதம்பரம்

ஈரானில் தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு..

Recent Posts