முக்கிய செய்திகள்

கோனா மின்சாரக் கார் : முதல்வர் பழனிச்சாமி அறிமுகம் செய்தார்..

ஹூண்டாய் கார் நிறுவனம் தயாரித்துள்ள மின்சாரத்தில் இயங்கும் கோனா மின்சாரக் காரை தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள காரை முதல்வர் பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் அறிமுகப்படுத்தி காரில் பயணம் செய்தார்.

கோனா மின்சாரக் காரின் விலை 30 லட்சம் என நி்ணயித்துள்ளது. ஒருமுறை சார்ச் செய்தால் 452 கி.மீ பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கோனா மின்சாரக் காரில் 5 பேர் பயணம் செய்யலாம்.