கோதண்டராமர் சிலை பெங்களூருவுக்கு சென்று சேர்ந்தது

தமிழகத்தில் இருந்து பல்வேறு தடைகளை தாண்டி பெங்களூரு வந்த கோதண்டராமர் சிலைக்கு மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

பெங்களூரு ஈஜிபுராவில் உள்ள கோதண்டராமசாமி கோவிலில் பிரமாண்டமான கோதண்டராமர் சிலையை நிறுவ அறங்காவலர் குழு முடிவு செய்தது.

அதன்படி தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் பிரமாண்ட கோதண்டராமர் சிலை வடிவமைக்கப்பட்டது.

350 டன் எடை கொண்ட கோதண்டராமர் சிலை ராட்சத லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூரு நோக்கி புறப்பட்டது. ரோடு, பாலம் சேதமடைவது, மாற்றுப்பாதை அமைப்பது,

கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது என்பன போன்ற பல்வேறு பிரச்சினைகளை கடந்து கோதண்டராமர் சிலை கடந்த 25-ந் தேதி கர்நாடக-தமிழக எல்லைப் பகுதியை அடைந்தது.

இந்நிலையில், 7 மாதங்களுக்கு பின்னர் அந்த சிலை ஈஜிபுராவை சென்று அடைந்தது. அங்கு குவிந்த பக்தர்கள் கோதண்டராமர் சிலைக்கு மாலைகள் அணிவித்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.