
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர் பேரூராட்சியில் 4வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திருமதி.பொன்னழகு மணி அவர்கள் இன்று பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி (@) சத்தியநாதன் தலைமையிலும், முன்னாள் தேசிய செயலாளர் திரு.H.ராஜா அவர்கள் முன்னிலையிலும், பாஜக கட்சியில் இணைந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொதுசெயலாளர்கள் திரு.மார்தாண்டம் & திரு.A.நாகராஜன் , மாநில துணைத்தலைவர் இளைஞரணி திரு.D.பாண்டித்துரை அவர்கள் முன்னிலையிலும், கோட்டையூர் பேரூராட்சி நகர் தலைவர் ரவீந்தீரன், ஒன்றிய தலைவர் பாண்டியநாராயணன், ஒன்றிய பொது செயலாளர்கள் குமரேசன் மற்றும் மெய்யர் அவர்கள் முன்னிலையில் இணைந்தார்கள்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்