முக்கிய செய்திகள்

கோவையில் திடீர் எம்ஜிஆர்,ஜெயலலிதா சிலைகள்: பொதுமக்கள் வியப்பு..


கோவையில் நடக்க இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அண்ணா சிலையை செப்பனிட்டு வந்தார்கள். சிலையைச் சுற்றி இரும்பு தகரங்கள் வைத்து மறைவு ஏற்படுத்தபட்டிருந்தது.

பணிகள் நிறைவடைந்து தகரங்கள் நீக்கப்பட்டதும் சஸ்பென்ஸ் காத்திருந்தது. அண்ணா சிலைக்கு அருகிலேயே, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் அமைத்துள்ளார்கள்.