காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரித் தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
கிருஷ்ணகிரி திமுக கூட்டணி வேட்பாளாராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டாக்டர். செல்லக்குமாருக்கு வாக்கு சேகரித்தார்.
மோடி தன் கருத்தை மட்டுமே பிரதிபலிக்க வேண்டும் என்று நினைக்கிறார். வேறுபட்ட சிந்தனைகளை ஏற்க மறுக்கிறார். என்று குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழகத்தையே கட்டுப்படுத்த நினைக்கிறார் பிரதமர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை நிகழ்ச்சி வருகிறார்.
கிருஷ்ணகிரியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து பேசி வருகிறார்.
அப்போது ராகுல் காந்தி பேசியது பின்வருமாறு :
*தமிழக மக்களின் குரல் மத்தியில் ஒலிக்கவில்லை, அதனை கேட்க செய்ய வேண்டும்
*அதிமுக ஆட்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழகத்தையே கட்டுப்படுத்த பிரதமர் மோடி நினைப்பதாக கூறினார்.
*தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது அவர்களை பிரதமர் அழைத்து பேசவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
*ஜிஎஸ்டி வரியால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளதாக ராகுல் கூறினார்.
*பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பொதுமக்களின் பணத்தை நரேந்திர மோடி பறித்துச் சென்றுவிட்டார்.
இவ்வாறு ராகுல் காந்தி பரப்புரையில் பேசினார்.