கேரளாவில் உயிரிழந்த கிருஷ்ணசாமி உடலுக்கு கனிமொழி அஞ்சலி..


‘மாணவர்கள், பெற்றோர்களைத் தவிக்கவிடும் நீட் தேர்வு அவசியமா என்பதை அரசு சிந்திக்க வேண்டும்’ என்று தி.மு.க எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், அவரது மகன் நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாகுளம் சென்றிருந்தபோது உடன் சென்றார். நேற்று நீட் தேர்வு நடந்துகொண்டிருந்த நேரத்தில், அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவர், உயிரிழந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். தற்போது சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ள அவரது உடல், இறுதிச் சடங்குக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு தி.மு.க மாநிலங்களவை எம்.பி., கனிமொழி அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், ‘மாணவர்கள், பெற்றோர்களைத் தவிக்கவிடும் நீட் தேர்வு அவசியமா என்பதை அரசு சிந்திக்க வேண்டும். எது சரியான உடை என்பதை அணிபவர்கள் தான் முடிவுசெய்ய வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதே சரியான தீர்வாக இருக்கும். நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க தொடர்ந்து போராடும். தமிழகத்தை மத்திய அரசிடம் அ.தி.மு.க அரசு அடகுவைத்துள்ளது’ என்று தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி…

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது : உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு..

Recent Posts