முக்கிய செய்திகள்

கதுவா பாலியல் பலாத்கார வழக்கு: ‘‘குற்றவாளியை தூக்கிலிட வேண்டும்’’ :மேனகா காந்தி ஆவேசம்..


குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கிலிட வகை செய்யயும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் கதுவா நகரில் 8 வயது முஸ்லிம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கும் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலை உருவாகியுள்ளது. இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

‘‘காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சமீபகாமாகவே குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை தூக்கிலிட வேண்டும். 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டை விதிக்க வகை செய்யும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என எங்கள் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது’ எனக்கூறினார்.