கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளியாகும் கழிவுகளை சேகரிப்பதற்கு போதிய கட்டுமானம் இல்லாத காரணத்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அணு உலையை மூட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது எனவும் அணுக் கழிவுகளைச் சேகரிக்க போதுமான கட்டுமானத்தை வரும் 2022-க்குள் அமைக்க மத்திய அரசுக்கு அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.