முக்கிய செய்திகள்

கூடங்குளம் அணுமின்நிலைய அணுக்கழிவுகள் சுத்தரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா? : உச்ச நீதிமன்றம் கேள்வி


கூடங்குளம் அணுமின்நிலைய அணுக்கழிவுகள் சுத்தரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா என்று பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அணுக்கழிவுகள் சரியாக பாதுகாக்கப்படுகிறதா என ஜூலை முதல்வாரம் அறிக்கை தர தேசிய அணுசக்தி முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடங்குளம் அணுக்கழிவு சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலப்பதாக வழக்கு தொடரப்பட்டது.