அடுத்த 48 மணி நேரத்தில் குமரிக கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு குறைவு என்றும் அதே சமயம் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.