முக்கிய செய்திகள்

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை..


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.