கும்பமேளா சமயத்தில் ராமா் கோவில் கட்டுவதற்கான தேதி : ராம்ஜி தாஸ் அறிவிப்பு

நிர்மோஹி அகாராவைச் சேர்ந்த ராம்ஜி தாஸ், அயோத்தியில் வி.எச்.பி. நடத்தும் தர்மசபாவில் ராமர் கோயில் கட்டுவதற்கான தேதி 2019 கும்பமேளா சமயத்தில் அறிவிக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தர்மசபாவில் பேசிய ராம்ஜி தாஸ், “பிரயாக்ராஜில் 2019ல் நடைபெறும் கும்பமேளாவின் போது ராமர் கோயில் கட்டுவதற்கான தேதி அறிவிக்கப்படும்.
இதற்கு நாள் தூரத்தில் இல்லை, அதுவரை நீங்கள் எல்லோரும் பொறுமை காக்க வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

ராமஜென்மபூமி நியாஸின் தலைவரான நிருத்யா கோபால் தாஸ் தான் பேசும்போது, “இங்கு கூடியுள்ள கூட்டத்தினர் வாழ்வின் பல பிரிவுகளிலிருந்தும் வந்துள்ளனர்,
இந்தக் கூட்டமே ராமர் கோயில் கட்டுவதற்கான ஆதரவை தெரிவிக்கிறது.

நாம் நம் நீதிமன்றங்களை மதிக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி மீதும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதும் நமக்கு நிரம்ப நம்பிக்கை உள்ளது.
ராமர் கோயில் கட்ட யோகி ஆதித்யநாத் வழிகாட்ட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
மதத்தலைவர் ராம் பத்ராச்சார்யா கூறும்போது, “நவம்பர் 23ம் தேதியன்று நான் மூத்த மத்திய அமைச்சரிடம் பேசினேன்,
டிசம்பர் 11ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் அமர்ந்து ராமர் கோயில் கட்டுவது பற்றி முடிவெடுப்பார் என்று அவர் உறுதி அளித்தார்.

மேலும் நாம் ஒரு போதும் ஏமாற்றப்பட மாட்டோம் என்றும் தெரிவித்தனர், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அவசரச் சட்டம் இதற்காக போடப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

நாம் அமைதி காப்போம். நீதிமன்றம் நமக்கு துயரை அளித்துள்ளது, ஆனால் மக்கள் கோர்ட் நமக்கு ஏமாற்றம் அளிக்காது, ராமர் கோயில் கட்டப்பட்டு விட்டால் இந்து ராஜ்ஜியம் அறிவிக்கப்பட்டது போன்றதாகும்.” என்றார்.

இதற்கு முன்னால் மூத்த தலைவர் சம்பத் ராய் கூறும்போது, “ராமர் கோயில் கட்ட அத்தனை நிலமும் வேண்டும். நிலத்தைப் பிரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

டெல்டா விவசாயிகளை காப்பாற்றுங்கள் : பேனருடன் சிட்னி மைதானத்தில் திரண்ட தமிழர்கள்…

புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு : 3-வது நாளாக இன்று ஆய்வு…

Recent Posts