சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி ஆதீன மடத்தில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பெரி.வீர. சண்முகநாதனுக்கு “அறமனச் செம்மல்” விருதுவழங்கினார் தவத்திரு பொன்னம்பல அடிகளார்.
முன்னதாக வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு குன்றக்குடி ஆதீனத்திற்குற்பட்ட குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் வெற்றிவேல் திருக்கோலத்தில் கோயிலிருந்து குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்திற்கு எழுந்தருளினார். சண்முகநாதபை் பெருமானை குருமகாசன்னிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் வரவேற்றார்.
வரவேற்பில் மேலதாளங்கள் முழங்க திருமாலைக் கவிஞர்கள் அறுவர் பாமாலை பாடினார்கள். குன்றக்குடி ஆதீனத்திற்குற்பட்ட 19 கல்வி நிறுவனங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், அதற்கு காரணமான ஆசிரியர் பெருமக்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.
வைகாசி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆதீனத்தில் வழங்கப்பம் அறமனச்செம்மல் விருது. இந்தாண்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பெரி.வீர. சண்முகநாதனுக்கு அறமனச் செம்மல் விருதுவழங்கினார்.தவத்திரு பொன்னம்பல அடிகளார்.
விழாவில் பேசிய தவத்திரு பொன்னம்பல அடிகளார். ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழாவில் சண்முகநாப் பெருமானின் ஆசியுடன் ஆன்மீகப்பணி, சமூகப்பணி, அறப்பணி ஆற்றிவரும் மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பெரி.வீர. சண்முகநாதனுக்கு அறமனச்செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.
குன்றக்குடி மலைமேல் வீட்டிருக்கும் சண்முகநாதப் பெருமான் அருள் பாலிப்பதைப் பற்றி சொல்ல நாட்கள் போதாது. சண்முகநாதன் பெருமைகளை சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை.
கோவையில் 1994-ல் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு யாம் சென்று அமைதி நடவடிக்கையில் இறங்கினோம். இதே போல் மண்டைக்காடு கலவரத்தின் போது நமது மகா சன்னிதானம் 48 நாட்கள் அங்கு தங்கி அமைதியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இதற்கு காரணம் சண்முகநாதப் பெருமானின் அருளே என்று பேசினார்.
முன்னதாக அறமனச் செம்மல் விருது பெற்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேசும் போது.
எனக்கு அறமனச்செம்மல் வருது வழங்கிய குருமகாகசன்னிதானத்திற்கும், முன்னாள் நீதியரசருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் அவர் தனிமனிதன் ஒழுக்கமும்,ஆன்மீக சிந்தனை இருந்தாலே போதும். எல்லா நன்மைகளும் கிடைக்கும். மனிதன் சிறந்தவனாக திகழலாம். இப்போதெல்லாம் கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பாவங்களை போக்கவும்,வேண்டுதல்களுக்கும் தான் கூடுகிறது என்றார்.
விழாவில் முன்னாள் நீதியரசர் சொக்கலிங்கம், முன்னாள் சிக்ரி விஞ்ஞானி பாலகிருஷ்ணன், மக்கள் கவிஞர் அரு.நாகப்பன் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். கவிஞர் முனைவர் சேதுபதி வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் ஆதீன புலவர் அரு.மாசிலாமணிக்குபொற்கிழி வழங்கி மகாசன்னிதானம் பாராட்டினார்கள்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்