

குன்றக்குடி திருவண்ணமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் .என். காமகோடி அவர்களை கும்பகோணத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆசி வழங்கினார்.

திருத்துறைப்பூண்டி அருகில் அமைந்துள்ள கொறுக்கை கிராமத்தில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் (கல்வி) அறக்கட்டளையின் கீழ் இயங்கும் திருவள்ளுவர் அருள்நெறி அரசு உதவி நடுநிலைப்பள்ளி கடந்த கஜா புயலின் போது முழுமையாக பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பள்ளியைச் சீர் செய்யும் நோக்கில் தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்கா , சிட்டி யூனியன் வங்கி கும்பகோணம்,மகாராஜ் பேக்கரி புதுக்கோட்டை , மைதீன் கோவிந்தராஜன் ஜீவல்லர்ஸ் திருவாரூர் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையால் புதிய கட்டிடங்கள் கட்டடப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் நாளன்று குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 46-வது குருமகாசந்நிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நன்கொடையாளர்கள் பங்கேற்றனர், அவர்களுக்கு குருமகாசந்நிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் ஆசிவழங்கி, பரிசு வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிட்டி யூனியன் நிர்வாக இயக்குனர் டாக்டர் .என். காமகோடி அவர்களின் சார்பில் வங்கியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் குன்றக்குடி மகாசந்நிதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் கும்பகோணத்தில் அமைந்துள்ள சிட்டி யூனியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் டாக்டர் .என். காமகோடி அவர்களைச் சந்தித்து ஆசி வழங்கினார்கள்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்