
குன்றக்குடி சண்முகநாதர் கோயிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு சண்முகநாதர் கோயிலில் இன்று மாலை திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தார்.

தீபம் ஏற்றப்பட்டதுடன் சண்முகநாதப்பெருமான் கோயிலின் உட்பிரகாரத்தில் உலா வந்தார்.

முன்னதாக குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் பரணி தீபத்தை தவத்திரு பொன்னம்பல அடிகளார் ஏற்றி வைத்தார்.

மலையின் கீழ் உள்ள ஸ்ரீகாளாஸ்திநாதர் சன்னதியில் தீபம் ஏற்றி சொக்கப்பான் கொளுத்தப்பட்டது.

இன்று காலை முதலே குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்