சைவத் திருமடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மடங்களுள் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் மடமும் ஒன்று.
ஆதீன மடத்தில் 695-வது மகா குருபூசை இன்று கோலாகலமாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் 695-வது மகா குருபூசை விழா இன்று( 04.09.20) நடைபெற்றது.
ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்திதானம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையேற்று விழாவினைத் தொடங்கி வைத்தார்கள்.
புதுப்பிக்கப்பட்ட குன்றக்குடி ஆதீன மடத்தில் அதிகாலை 4 மணிக்கு மகா கணபதி யாகம் நடைபெற்றது.
காலை 11 மணிக்கு குருபூசை விழா தொடங்கியது. விழாவினை ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்திதானம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார்கள்.
45-வது மகாகுருசந்திதானம் வரலாறு ” இந்திய இலக்கிய சிந்தனை” சாகித்ய அகாதெமி பதிப்பித்துள்ள ஆங்கில நுாலை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார்கள்.
பேராசிரியர் முனைவர் திரு.சொ.சேதுபதி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
பொறியாளர் அ. சுப்பிரமணியன்,வ.தியாகராஜன் இருவருக்கும் திருப்பணி தொண்டர் மணி விருதும், குன்றக்குடி தருமைக் கயிலை குருமணி மேல்நிலைப்பள்ளி ஆசிரியை தையல்நாயகி, பிரான்மலை வள்ளல் பாரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் க.நாச்சி முத்து இருவருக்கும் நல்லாசிரியர் விருது ஆதீனம் சார்பில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் விழா நடைபெற்றது. விழாவினை இணைய வழியில் காண ஏற்பாடு செய்யப்பட்டது . உலக முழுவதும் பக்தர்கள் மகாகுருபூசைவிழாவினை கண்டுகளித்தது மிகச் சிறப்பான அம்சமாக அமைந்தது.
செய்தி & படங்கள்
சாய்தர்மராஜ்