குரங்கணி காட்டு பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தேனி செல்கிறாா்.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் பங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலையேற்றம் பயிற்சிக்காக சென்ற மாணவ, மாணவிகள் உள்பட 37 போ் இந்த விபத்தில் சிக்கினா். துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம், அமைச்சா்கள் விஜயபாஸ்கா், சீனிவாசன், ஆா்.பி. உதயகுமாா் உள்ளிட்டோா் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனா்.
விபத்தில் 27 போ் மீட்கப்பட்ட நிலையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள மலை இடுக்கில் குதித்த 9 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளனா். அவா்களில் 6 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்றும், 3 போ் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நபா்களை நேரில் சந்தித்து ஆறுதல் தொிவிப்பதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்திற்கு செல்கிறாா். தேனி மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபா்களை சந்தித்து ஆறுதல் கூறுவாா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.