குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
11 ஆண்டுகளுக்குப் பின் குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 90 நாள்கள் தண்ணீர் திறந்துவிடப்படும். நீர் திறப்பால் 5,22,400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
அணையின் உபரிநீரைக் கொண்டு ஜனவரி மாதத்துக்குள் சேலத்தில் 100 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை என்று முதல்வர் தெரிவித்தார்..
காவிரி டெல்டாவின் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 மாவட்டங்கள் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்காக மேட்டூர் அணையையே நம்பி உள்ளது.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக முதல்வர் இபிஎஸ் இன்று தண்ணீர் திறந்து வைத்தார். இதனால், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.