முக்கிய செய்திகள்

நான் ஐயிட்டமா… செருப்படிதான்… : ட்விட்டரில் எகிறிய குஷ்பு

ட்விட்டர் தளங்களில் இப்போதெல்லாம் என்னதான் பகிர்வது, எழுதுவது என்ற வரைமுறையெல்லாம் இல்லை. பிரபலங்கள் முதல், முகம் தெரியாத சாமானியர்கள் வரை பலரும் ட்விட்டரை படுகேவலமாகவே பயன்படுத்தி வருகின்றனர். நடிகையும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்புவின் ட்விட்டரில் ஒருவர்  நீங்க ஐய்ட்டமுக்கு பொறந்தவுங்களா என்று கேட்டு ட்விட் போட்டிருக்கிறார். பதிலுக்கு கொந்தளித்த குஷ்பு ஐட்டம்னெல்லாம் பேசினா செருப்படிதான் என்று ஆங்கிலத்தில் அரையும் குறையுமாக பதிவிட்டுள்ளார். தகவல் தொழில் நுட்பம் தான் வளர்ந்திருக்கிறதே தவிர, மனிதர்களின் தரம் வளரவில்லை என்பதைத் தான் இத்தகைய போக்கு நமக்கு உணர்த்துகிறது.