கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி காலமானார்..

கூத்துப்பட்டறை நிறுவனர் ந.முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் இவரிடமே பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூரை சேர்ந்த இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார்.

அவரின் மறைவு தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.