குவைத் அரசின் பொது மன்னிப்பு: இந்திய தூதரகத்தில் குவியும் தொழிலாளர்கள்..


நாடு திரும்ப குவைத் அரசின் சலுகையை பெற, தூதரகத்தை நோக்கி தொழிலாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில் எண்ணெய் வளமிக்கது குவைத். இங்கு 11 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் ஆயிரக்கணக்கானோர் பணி அனுமதிக் காலம் முடிந்தும் குவைத்தில் தங்கியுள்ளனர்.

இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வேலை நீட்டிப்பு, ஊதியம் ஆகியவற்றை மறுத்துவிட்டன.

 

இதுதொடர்பாக புகார்கள் குவிந்த நிலையில், விசா மற்றும் பணி அனுமதிக் காலம் முடிந்து சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு குவைத் அரசு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.

முறைகேடான தொழிலாளர்கள் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறினால் தண்டனை மற்றும் அபராதத் தொகை ஏதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்திய தூதரகத்தை நோக்கி தொழிலாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.