மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1990 முதல் 97 வரை லாலு பிரசாத் யாதவ் பீகார் மாநில முதல்வராக இருந்தபோது மாட்டுத்தீவனம் வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் ரூ.89 லட்சம் லாலு லபக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக லாலு பிரசாத் மீது 5 வழக்குகள் உட்பட 64 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013ஆம் ஆண்டு லாலு பிரசாத் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அவர் மீது தொடரப்படட 5 வழக்குகளில் ஒன்றில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற அவர் பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து லாலு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் மீண்டும் இவ்வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.