சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கலைஞருக்கு நினைவிடம் கட்ட இடம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 7-ஆம் தேதி கலைஞர் காலமான நிலையில், அவரது உடலை அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கவும் இடம் வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கலைஞரின் உடல் அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கலைஞருக்கு நினைவிடம் கட்ட 1 புள்ளி 72 ஏக்கர் நிலம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் அண்ணா நினைவிட வளாகத்தில் உள்ள காலியிடங்களை கணக்கிட்டு 1 புள்ளி 72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
land allotted for kalaignar memorial