இலங்கையில் அவசர நிலை வாபஸ்


இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையை திரும்பப் பெறுவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து அவசர நிலை பிரகடன உத்தரவை ரத்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாகி உள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சிறிசேனா தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவன அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளை சந்தித்து தங்களின் இணையதளம் வன்முறையை தூண்டுவதற்கு பயன்படுத்தப்படாது என உறுதி அளித்துள்ளனர். இதனையடுத்தே அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கண்டியில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மார்ச் 6 ம் தேதி இலங்கையில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.


 

காவிரி விவகாரத்தில் திமுக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் : திருமாவளவன்

2 கோடி வேலைவாய்ப்பு எங்கே : மோடியை சாடிய மன்மோகன் சிங்..

Recent Posts