உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலகாபாத்துக்கும் வாரணாசிக்கும் இடையேயுள்ள பதோஹியில் சீதைக்கான கோயில் அமைந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் படகு மூலம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்துவரும் உத்தரப்பிரதேச காங்கிரஸ் கிழக்கு மாநில பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, சீதாதேவி பூமிக்குள் ஐக்கியமான இந்த புனிததலத்தில் இன்று வழிபாடு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் 70 ஆண்டுகளாகச் செய்தது என்ன என்ற வாதம் காலாவதியாகி விட்டதாகக் குறிப்பிட்ட அவர்,
கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்தது என்ன என்று பாஜக பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளாார்
உத்தரப்பிரதேசத்தில் சிறப்பான ஆட்சி நடப்பதாக கூறும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு நன்றாக தான் உள்ளது. ஆனால் உண்மை நிலைமை அப்படி இல்லை என்று சாடியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் மக்களை சந்திப்பதாகக் கூறிய பிரியங்கா, மக்கள் அனைவரும் இடர்பாட்டில் சிக்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மோடி அரசின் முன் எந்த ஒரு விஷயத்தையும், பிரச்சினையையும் எழுப்பினால் நாம் தேசவிரோதி என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக சாடினார்.
இந்த தேசமும், ஜனநாயகமும் அனைவருக்குமானது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.