கடிதம் எழுதினால் ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு…

தமிழக அஞ்சல்துறை சார்பில் மாநில மற்றும் தேசிய அளவிலான கடிதம் எழுதுதல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள விளம்பரத்தில் கூறியுள்ளதாவது:

போட்டி விபரங்கள்:
கடிதம் தலைப்பு: என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்

வயது வரம்பு: இல்லை

வார்த்தைகள் அளவு:

இன்லேண்டு லெட்டர் பிரிவில் 500 வார்த்தைகள், என்வலப் பிரிவில் 1000 வார்த்தைகள்

மொழி: தமிழ்/ஆங்கிலம்/இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழி

கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்

பரிசுத் தொகை:

மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு: ரூ.25,000; இரண்டாம் பரிசு: ரூ.10,000; மூன்றாம் பரிசு: ரூ. 5,000

அகில இந்திய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு: ரூ. 50,000; இரண்டாம் பரிசு 25,000; மூன்றாம் பரிசு 10,000

கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதன்மை அஞ்சல் துறைத் தலைவர்,
தமிழ்நாடு வட்டம், சென்னை – 600 002

கடைசி தேதி: செப்டம்பர் 30ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 31 தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது

கருணாஸ் மீது போடப்பட்ட இரண்டு வழக்குகளிலும் ஜாமீன்…!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு : நடிகர் பிரகாஷ்ராஜ் தொடங்கி வைத்தார்

Recent Posts