
மும்பை பங்குச் சந்தையில் எல்.ஐ.சி. பங்குகள் விலை 30 ரூபாய்க்கு மேல் சரிய தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.
சந்தையில் பட்டியலிட்ட முதல் நாளில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதில் எல்.ஐ.சி. உலக அளவில் 2ம் இடம் பிடித்துள்ளது.
சந்தைக்கு வந்த போது ரூ.6 லட்சம் கோடியாக இருந்த எல்.ஐ.சியின் மதிப்பு ரூ.5,35,316 கோடியாக சரிய தொடங்கியது.
ரூ.12 லட்சம் கோடியாக இருந்த எல்ஐசியின் பங்கு மதிப்பு ஒன்றிய அரசு 6 லட்சம் கோடியாக குறைத்து பங்கு சந்தையில் வெளியிட்டது. பங்கு சந்தையில் எல்ஐசியின் பங்குகள் தொடர்ந்து இறங்கு முகமாகவுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.