கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக : ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக – ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..
கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்
ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை கடந்த ஜூன் 18-ம் தேதி வெளியிட்டது ஒன்றிய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் இந்த மசோதாவுக்கு கமல், சூர்யா, கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர்.

நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமசாமி, நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து ஆதரவு கோரினர்.
இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா, மாநில அரசுகளின் அதிகாரங்களையும் குறைக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய அதிகாரத்தையும் குறைக்கிறது. வயது வாரியாக சென்சார் சான்று வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காரைக்குடி நகர தலைவர் சந்திரன் உள்பட பாஜக நிர்வாகிகள் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் காங்.,சில் இணைந்தனர்..

சமூக போராளி ஸ்டேன் சுவாமியின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது: ஐ.நா. இரங்கல்..

Recent Posts