முக்கிய செய்திகள்

விளக்கு ஏற்றுவோர் கவனத்திற்கு: மெயின் சுவிட்சை அணைக்க வேண்டாம்: மின்சாரத்துறை..

தமிழ்நாடு மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இன்று இரவு 9.00 மணி முதல் 9.09வரை வீட்டு மின் விளக்குகளை மட்டும் அணைக்கும் மாறு வேண்டிக் கொள்கிறோம்.

இந்நிகழ்வில் மின் தேவையில் ஏற்படும் மாற்றத்தை கையாளும் வகையில் நமது மின் கட்டமைப்பு வலுவானதாகவும்,நிலையானதாகவும் உள்ளது.

இத்தருணத்தில் மற்ற அனைத்து மின் உபகரணங்களும் வழக்கம் பொல் இயக்கத்தில் இரக்கலாம்.

ஆதலால் மெயின் சுவிட்சை அணைக்க வேண்டாம். மேலும் இத்தருணத்தில் தெரு விளக்குகள் மற்றும் மருத்துவமனைகள்,காவல் நிலையங்கள்,பொது நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய இடங்களில் உள்ள மின் விளக்குகள் வழக்கம் போல் இயக்கத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.