மதுவால் 2 லட்சம் பேர் தமிழகத்தில் மரணம்: அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி..


குடிபழக்கம், மனநோய், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சித்தகவலை தெரிவித்துள்ளார்.

லயலோ கல்லூரியில் நடைபெற்ற தூக்கமின்மை குறித்து கருத்தரங்கில் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டார். விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

மது குடிக்கும் பழக்கம் இந்தியாவில் 40 வயதிலிருந்து 13 மூன்றாக குறைந்து உள்ளது, 13 வயதிலிருந்து குடிக்கும் பழக்கம் இருப்பவருக்கு 26 வயதில் உடலில் அனைத்து உறுப்புகளுக்கு செயல் இழந்து விடும். உலகில் குடிக்கும் பழக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது தமிழகத்தில் 2 லட்சம் பேர் இறந்துள்ளதாக பிரபல லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.

தூக்கமின்மைக்கு மிகப்பெரிய எதிரி மெபைல் சாதனங்கள் தான், செல்போனை தூர எரியுங்கள், அது மாணவர்களுக்கு எதற்கு. அவற்றை போதுமான அளவிற்கு கையாளவேண்டும். செல்போன் ஒளி வருங்காலத்தில் பெரிய பாதிப்பாக உருவாகும்.

தூக்கமின்மை இளவயதில் மிகபெரிய பிரச்சினையாக தெரியாது வயதான காலத்தில் அதன் பிரச்சினை பெரிய அளவில் தெரிய வரும். மாணவர்களுக்கு விளையாட்டு என்பது மிக முக்கியம், அதை தவறாது பழக்கத்தில் கொள்ள வேண்டும். என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

மதுவால் ஆண்டுக்கு 18 லட்சம் பேர் இந்தியாவில் இறக்கின்றனர் என்றும், இதில் தமிழகத்தில் மட்டும் 2 லட்சம் பேர் இறப்பதாக கூறினார். சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு மதுவால் வருமானம் வருகிறது. தமிழ்நாட்டில் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு இது என்பது வேதனைக்குரியது என்றார்.

இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான் என்றும் தங்கள் இயக்கத்தின் சார்பில் மதுக்கடைகளுக்கு எதிராக வழக்கு தொடரபட்டு மது கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றால், உடனே தமிழக அரசு முறையீடு செய்து திரும்ப திறப்பதாகவும் மதுகடைகளை படிப்படியாக மூடுவோம் என்ற தமிழக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் குறிப்பிட்டார்.